தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw .gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் எந்த தொற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.