மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது இனி 2000 ரூபாய் நோட்டை உங்களுடைய கணக்கில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அருகில் உள்ள தபால் நிலையம் மூலமாகவும் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி உங்களுடைய கணக்கில் டெபாசிட் கொள்ளலாம் .அது மட்டும் இன்றி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள் (TLR) என்று அழைக்கப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.