பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும் வங்கியில் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ந்து அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். இதற்கான தேதியை அரசு நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை சமர்ப்பிக்க காலவரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம் டிஜிட்டல் சான்றிதழும் சமர்ப்பிக்கலாம். அதற்கு சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி  உதவியோடு மிக எளிதான முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். வீட்டு வாசலிலேயே இந்த வேலையை முடித்து விடலாம். எஸ்பிஐ வங்கி வீட்டு வாசலிலேயே வங்கி சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழை எளிமையாக சமர்ப்பித்து விடலாம். இந்த சேவை பெற வேண்டும் என்று நினைத்தால் பக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளையை தொடர்பு கொள்ள வேண்டும்.