நீங்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்க நினைத்து இருந்தாலும் அல்லது வாங்கி இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5% அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது . உண்மையில் நிதி நிறுவனங்களின் கலாச்சாரம் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து கடனை திருப்பி செலுத்தாதவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக கடன்கள் எளிதில் திருப்பி செலுத்தப்பட்டதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசம் ஆகிவிட்டது.

யார் வேண்டுமானாலும் உடனடியாக கடன் வாங்க முடிகிறது . அவர்களால் திருப்பி செல்ல செலுத்த முடிகிறதா என்பதே தெரியாமல் கடன் வழங்கப்படுகிறது. எளிதாக கிடைப்பதால் பலரும் அதை தேடி செல்கிறார்கள். இந்த நிறுவனங்களில் நாம் வாங்கும் கடனுக்கு ஒரு இஎம்ஐ தவணையை கட்ட தவறினால் வாடிக்கையாளருக்கு வட்டி இரட்டிபாக்கப்படுகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி மாற்ற அபராதம் என்ற பெயரில் பெரிய அளவில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்து வருகிறது.

எனவே நீங்கள் கடன் வாங்க போகிறீர்கள் என்றாலும் அல்லது ஏற்கனவே வாங்கி இருந்தாலும் சரியான நேரத்தில் இஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் அதை பெற முடியாவிட்டால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கலாம்.