2023-க்கான உலக அளவிலான உணவுப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பல உணவுகள் இடம்பெற்றுள்ளன.

உலகளாவிய உணவு பட்டியலில் , சிக்கன் 65 மீண்டும் தனக்கென சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளது. மதிப்புமிக்க டேஸ்ட் அட்லஸ் ஆஃப் ஃபுட்ஸ்-ன்  படி, 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவுகளில் இந்தியாவை சேர்ந்த பல உணவுகள் தகுதியான இடத்தைப் பெற்றுள்ளன. அதன்படி, 

4.5 மதிப்பீட்டில் டெல்லியின் ‘பட்டர் சிக்கன்’ 7வது இடத்திலும், பஞ்சாபின் ‘தந்தூரி சிக்கன்’ 12வது இடத்திலும், பஞ்சாபின் ‘சிக்கன் டிக்கா’ 13வது இடத்திலும் உள்ளன. இதற்கிடையில், சென்னையின் ‘சிக்கன் 65’, அதன் காரமான மற்றும் சுவையான உணவுகளில் ஒன்றாக அறியப்பட்டு, 4.5 என்ற மதிப்பீட்டுடன் உலக தரவரிசை பட்டியலில்  41 வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசை இந்திய கோழி உணவுகள் மீதான உலகளாவிய பிரியத்தை  காட்டுகிறது, தற்போது வெளியான இந்த பட்டியல் இந்திய உணவு பிரியர்களிடடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.