பெரும்பாலும் அனைவருடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற ஏதாவது ஒன்றை வளர்ப்பது உண்டு அதை தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரென்ட் ரிவேரா என்ற 25 வயது யூடியூபர் சார்லி என்ற செல்ல நாயை வளர்த்து வருகிறார். அதன் முதல் பிறந்தநாளுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க விரும்பிய அவர் 20 ஆயிரம் டாலர்கள் (ரூ.16.5 லட்சம்) செலவில் தன் செல்ல நாய்க்கு சொகுசு வீடு கட்டியுள்ளார்.

நாய்க்கென பிரத்யேக படுக்கை, நாற்காலிகள், சோஃபாக்கள் மற்றும் மினி ஃப்ரிட்ஜ் ஆகியவற்றை இந்த வீட்டில் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் வித்தியாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.