சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே வயிற்றில் உள்ள பிரச்சனைக்காக வாங் அறுவை சிகிச்சை செய்து முழுமையாக குணமடைந்த நிலையிலும் அவர் நீண்ட நேரம் கழிவறையில் இருக்கும் பழக்கத்தை விடவில்லை.

ஷிப்ட் படி 8 மணி நேர வேலையில் 6 மணி நேரத்தை அவர் கழிவறையிலேயே செலவழித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்க அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கிட்டத்தட்ட 7 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவரை நிறுவனம் வேலையில் இருந்து தூக்கியது சரிதான் என கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.