நாம் என்னதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்றாக படித்து இருந்தாலும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நம் சுய சிந்தனை என்பது முக்கியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலையைத் தேடி செல்லும்போது interview தான் நம் வாழ்க்கையை மாற்றப் போகும் முதல் படியாக இருக்கும். என்னதான் நாம் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும் interview செல்லும்போது அதற்கு முன்னதாக ஒரு preparation இருக்கும். அது கூடவே பதற்றமும் நிறைந்திருக்கும். வேலை தேடிச் செல்லும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பொதுவான கேள்விகள் இருக்காது.

சில நிறுவனங்களில் நம்முடைய தரத்தை அறிய பலவிதமான கேள்விகள் கேட்கப்படும். அப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் தொடர்ந்து அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இவர் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். புத்தி கூர்மை அதிகமாக கொண்டதாலேயே இவர் இந்த இடத்தை எட்டி உள்ளார்.

இவர் தற்போது தன்னிடம் வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைத்துள்ளார். அந்தக் கேள்வி என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சினையை சமாளித்து நீங்கள் எப்படி வெளியே வந்தீர்கள் என்பதுதான் கேள்வி. இந்த ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் அளித்து விட்டால் எலான் மஸ்கிடம் வேலைக்கு சேர்ந்து விடலாம்.

நம்முடைய பிரச்சனையை நாமே சமாளித்து ஒரு கட்டத்தில் வெளியேறும் போது வாழ்க்கையின் தத்துவம் நமக்கு நன்றாக புரிந்து விடும். அதைதான் எலான் மஸ்க் கேள்வியாக முன் வைத்துள்ளார்.