மெக்சிகோவில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதியில் மனித உடற்பாகங்கள் கறுப்பு ப்ளாஸ்டிக் பைகளில் சுற்றி வீசப்பட்டுள்ளன. பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியான ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் செவ்வாயன்று இந்த பயங்கரமான சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அந்த உடல் பாகங்களை ஆய்வு செய்த போலீசார், அருகே உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் இருந்து காணாமல் போன 7 பெண்களுடன் உடற்பாகங்கள் ஒத்து போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குற்றவாளி யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில், ஜாலிஸ்கோவின் பல்வேறு பகுதிகளில், மனித எச்சங்கள் பைகளில் அல்லது குறிக்கப்படாத தற்காலிக கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித எச்சங்களுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.