கனடாவில் பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாடை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு சிகரட்டிலும் புகையிலை புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோயை உண்டாக்கும், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளிட்ட பல வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.