“பஞ்சாப் மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்!” தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனியார் அகாடமியில் ஒன்றாகப் படித்து வந்த இவர்களுக்கிடையே ஸ்னாப்சாட் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டு, அது நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியுள்ளது. இந்தத் தவறான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், மாணவியைத் தனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி, ஒரு மர்மமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அதோடு நிறுத்தாமல், அந்தப் பயங்கரமான காட்சிகளைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு, வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுவேன் என்று கூறி அந்த மாணவிக்குத் தொடர்ந்து உடல் மற்றும் மனரீதியான கடுமையான சித்திரவதைகளைக் கொடுத்துவந்துள்ளான்.
இதனால் பயந்து போய் ஆரம்பத்தில் யாரிடமும் சொல்லாமல் கவலையில் இருந்த மாணவி, ஒருகட்டத்தில் வாலிபரின் அச்சுறுத்தல் எல்லை மீறியதால் அலறித் துடித்துத் தனது தாயிடம் உண்மைகளைக் கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஞாயிற்றுக்கிழமையன்று காவல் நிலையத்தில் அதிரடிப் புகார் அளித்துள்ளனர்.
இந்தத் தாயின் புகாரின் அடிப்படையில் ஹோஷியார்பூர் போலீசார் உடனடியாகப் போக்சோ மற்றும் பிற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
