100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நாள் சுற்றுலா அட்டை கட்டணம் 150 ரூபாய் வைப்புத் தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும் எனவும் அட்டையை ஒப்படைத்தவுடன் ஐம்பது ரூபாய் வாய்ப்புத் தொகை திருப்பி தரப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.