ஒரு இளைஞன் தனது தாடியை முழுமையாக சவரம் செய்துவிட்டு, அதற்கு தன் தந்தையின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சென்றபோது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பற்றிய தொகுப்பு இதோ, கிளீன் ஷேவ் செய்த இளைஞன்; தர்ம அடி கொடுத்த தந்தை! சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வேடிக்கையான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. ஒரு இளைஞன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தாடியை முழுமையாக சவரம் செய்துள்ளார்.
Old-Kalesh b/w Son and Dad over Clean-Shaving💀 pic.twitter.com/OxrXgcOTuY
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 17, 2026
“>
இதனால் தனது புதிய தோற்றத்தைப் பார்த்தால் தனது தந்தை எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பதைப் பார்க்க ஆசைப்பட்ட அந்த இளைஞன், அதை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்ய முடிவு செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக அங்கே ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியது.
அந்த இளைஞன் தனது தந்தையின் அருகில் சென்று நின்றபோது, புதிய தோற்றத்தில் இருக்கும் தன் மகனைப் பார்த்த தந்தை ஒரு கணம் கூட யோசிக்காமல், நேராக ‘அக்ஷன் மோடிற்கு’ மாறினார். தன் கையில் இருந்த பொருளால் மகனை நோக்கி ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.
இந்நிலையில் தந்தையின் இந்த திடீர் கோபத்தையும் அதிரடி பதிலையும் சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினார். இந்த சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன், பலரது லைக்குகளையும் வேடிக்கையான கமெண்டுகளையும் பெற்று வருகிறது.
