போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது மாநில அரசின் பேருந்துகளில் உடல் பருமாணமாக இருப்பவர்களுக்கு ஏதுவாக பேருந்துகளில் சீட்டு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் உடல் பருமனாக இருப்பவர்கள் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க பெரிதும் சிரம ப்பட்டு  வருகிறார்கள். தட்டு தடுமாறி அமர்ந்தாலும் அருகில் அமர்ந்திருப்பவர்களின் நிலை திண்டாட்டம் தான்.

இல்லையென்றால் பருமனாக இருக்கும் அந்த ஒரு நபரை முழு இருக்கையையும் ஆக்கிரமித்துக் கொள்வார். எனவே தான் அரசின் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதாவது அரசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை 57 ஆக இருந்த நிலையில் தற்போது உட்காருவதற்கு இடையூறு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் பேருந்து இருக்கை  52 ஆக குறைக்கப்பட்டுள்ளது.