திமுக ஆட்சியின்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய பிசி/ எம்பிசி, எஸ்சி /எஸ்டி தேர்வுவர்களுக்கான வயது வரம்பானது 35 லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் மீண்டும் இவர்களுக்கான வயது வரம்பு 35 ஆக குறைக்கப்பட்டது. இதனால் 36, 37 வயதுடைய தேர்வுகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு பல வருட கோரிக்கைக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவதில் இருந்து தேர்வு முடிவு வெளியாவதற்கு பல வருடங்கள் ஆகிறது. இதனால் பலருக்கும் குரூப்-1 தேர்வு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு குரூப்-1 தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை 45 என்று நிரந்தரமாக உயர்த்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.