செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு மாநில கட்சி 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்திய அமைச்சரவையில் இருந்தது திமுக தான்.  18 ஆண்டுகள்…  வாஜ்பாய், மன்மோகன் சிங், ஐ கே குஜரால், வி பி சிங், சந்திரசேகர்.  எல்லாரு ஆட்சி காலங்களிலும் மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கு. அப்ப கச்சத்தீவை மீட்க நீங்க பாடுபட்டது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரணும் என்கிறீங்க…

கல்வியை பொதுப் பட்டியலுக்கு எடுத்துட்டு போகும்போது முதலமைச்சராக இருந்தது யாரு ? 18 ஆண்டுகள் இருந்த போது ஏன் மாநில பட்டியலுக்கு கொண்டு வரல ? தேர்தல் வரும்போது…..  நாங்க செத்தா தான் அழுவீங்களா ? அப்போ. உங்க ஆட்சியில் நீட்ல இறந்த மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை ? ஏன் இந்த தினேஷுக்கு மட்டும் அழுறீங்க ? திடீர்னு தஞ்சை டெல்டா விவசாயி மேல அக்கறை ? மீனவர் மேல அக்கறை.

மீன்பிடி தடைக்காலத்தில் ஊதிய உயர்வு,  கூலி உயர்வு அதெல்லாம் எப்படி வருது ? ஆனால் குற்றச்சாட்டு என்ன தெரியும்ல..?  மீன்பிடி தடை காலத்தில இவங்க அறிவிச்ச தொகையை முறையாக கொடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. மறுபடியும் கூட 2000 நான் கொடுக்குறதேன்னு எதையாவது ஒன்னு பேசிட்டு போய்கிட்டே இருக்கிறது.  என்னவோ ஒன்னு…. சகித்து சகித்து பழகிட்டு என் மக்களுக்கும்….  சரி வேற வழி இல்ல.இது கொடுமை தானே என தெரிவித்தார்.