சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க கோரிய மனுவை ஏற்க முடியாது எனவும் சொத்துக்களை விற்க அனுமதி கிடையாது எனவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹோமாவில் இருக்கும் ஒருவரை கவனிப்பது மிகவும் கடினம் என்பதாலும், சட்டத்தில் எந்த வழி வகையும் இல்லாவிட்டாலும் பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் கூறினார்கள். மேலும் கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு உத்தரவு வழங்கியதோடு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்யவும் அதில் 50 லட்சத்தை ஹோமாவில் இருக்கும் கணவர் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்ய வேண்டும் எனவும் அதிலிருந்து காலாண்டு தொகையைப் பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.