மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த 2014-ம் வருடம் வரை இந்தியாவின் மொத்த கடனனானது 50 லட்சம் கோடியாக இருந்தது என காங்கிரஸ் கட்சி கூறியது. எனினும் தற்போது இந்தியாவின் மொத்த கடன் 155 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தான் நாட்டின் கடன் 100 லட்சம் கோடி அதிகரித்து உள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.