பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்த பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார பாணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசியல் என்பது காலை முதல் மாலை வரை மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கஷ்டங்களைக் கேட்பது; அதை விடுத்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக நான்கு வீடுகளுக்குப் போய் வீடியோ எடுப்பது உண்மையான பிரசாரம் கிடையாது” என்று அவர் எள்ளலுடன் தெரிவித்துள்ளார்.

​மேலும், தாஜ் ஹோட்டலில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டுப் போவதெல்லாம் அரசியலாகாது என்று சாடிய அவர், அரசியல் என்பது சினிமா கால்ஷீட் போலச் சில மணிநேரம் வந்துவிட்டுப் போகும் வேலை அல்ல என்றும் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிச் சிந்திப்பதே உண்மையான அரசியல் எனத் தெரிவித்த வினோஜின் இந்த விமர்சனம், தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.