தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைகளுக்கு திமுக அரசு திட்டமிட்டு நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசி நேரம் வரை காக்க வைத்து அனுமதியைத் தாமதப்படுத்துவதாகவும், இதனால் முன்னேற்பாடுகளைச் செய்ய விடாமல் தடுத்து விழாவை ரத்து செய்ய வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
திமுக அரசு இதுபோன்ற தில்லுமுல்லுகளைத் தொடர்ந்து செய்து மக்களைக் குழப்ப முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள விஜய், ஆளுங்கட்சியின் இத்தகைய செயல்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல் திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
