உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி என்ற மலைக்கிராமம், முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி இருக்கும் முக்கிய இடமாகும். நேற்று இந்த பகுதியில் மழை அருவி போல கொட்டித் தீர்த்ததால், அருகே கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளம், தராலி கிராமத்துக்குள் புகுந்து, மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்த வெள்ளநீர், கட்டிடங்களை வாரி சுருட்டிச் சென்றது. இதில் சிக்கிய 4 பேர் உயிரிழந்ததோடு, பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேரழிவில், தராலி கிராமத்தில் இருந்த 25 ஓட்டல்கள் மற்றும் ஏராளமான வீடுகள், கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களின் நிலைமை தற்போது தெரியவில்லை, மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

“>

 

அதேசமயம், ரிஷிகேஷில் உள்ள பிரமாண்ட சிவன் சிலையைச் சூழ்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் 36 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளம் 340.50 ரிங்கிட் மீட்டர் அபாய அளவை எட்டியுள்ளதை காண முடிகிறது. பயமுறுத்தும் இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கவலையும், பதற்றமும் நிறைந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.