உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகில் உள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகப்வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கீர் கங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள் கட்டிடங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 5 பேர் பலியானார்கள். இது பற்றி தகவல் அறிந்து உள்ளூர் காவல்துறை, எஸ் டி ஆர் எஸ் ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. காரின் நான்கு புறமும் கதவுகள் போட்டிய நிலையில் இருந்தன. பந்து போன்று அந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த காரின் உள்ளே பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நிலைமை என்ன ஆனது என்ற விபரம் தற்போது வரையை தெரியவில்லை.