ரிஷப ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் மிகவும் அற்புதமாக நடக்கும். அரசு வழியில் எடுத்து முயற்சிகள் அணுகுலத்தை கொடுக்கும். வருமானம் ஓரளவு திருப்தியை கொடுக்கும். உங்கள் ஆலோசனையை கேட்டு நடந்தவர்கள் தேடி வந்து பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வரக்கூடும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். சிரித்த முகத்துடன் காணப்படுவீர்கள். இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்.

சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். சக நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்