ரிஷப ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு யோகமான நாளாக இருக்கக்கூடும். நிதிநிலை உயர்ந்து சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அதையும் நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றியை கொடுக்கும்.

முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சக நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கடனை அடைக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். சக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று பெண்கள் முன் யோசனையுடன் செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

இன்று மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். இலட்சிய நோக்குடன் கல்வி அமைத்துக் கொள்வீர்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்