மிதுன ராசி அன்பர்களே,

இன்று நல்லவர்கள் நட்பு ஏற்படக்கூடும். கவலைக்கிடமாக இருந்த சில விஷயங்கள் சூடு பிடிக்க துவங்கும். எண்ணற்ற மாற்றங்கள் யோகங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. உங்களால் பலன் பெற்று நன்றி மறந்தவர்களை மன்னித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பண வரவு இருக்கும். மனைவி அதிக அன்பு பாசம் கொள்வார்கள். விரயம் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் ஏற்படும். ஆலய வழிபாடு அமைதியை கொடுக்கும். இன்று பணம் வருகை அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். தாயிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இந்த நாள் இனிமையான நாள். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்திக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை இருக்கும். இறைவழிபாட்டிலும் நம்பிக்கை கொள்வீர்கள். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்