ரிஷப ராசி அன்பர்களே,

இந்த நாள் மனதிற்குள் ஒரு விதமான கருணை தன்மை மிகுந்து காணப்படும். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நல்ல செயல்களை செய்து சமூகத்தில் வரவேற்பை பெறுவீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. எதிலும் சிந்திக்காமல் முடிவெடுக்க வேண்டாம். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். வெற்றி கிடைக்கும்.

முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தேவையான பண உதவிகள் கிடைக்கப்பெறும். புதிய முயற்சிகளை இன்று தள்ளிப் போடுவது நல்லது. காரியத்தடை தாமதம் ஏற்படுத்திய பணிகள் சுறுசுறுப்பாக நடக்கும். போட்டி பொறாமைகள் விலகிச் செல்லும். மன நிறைவான நாளாக இந்த நாள் இருக்கும். செல்வாக்கு மேலோங்கும். இந்த நாள் வெற்றி மீது வெற்றி வரும் சூழல் உள்ளது.

பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். எந்த பணியிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்