மிதுன ராசி அன்பர்களே,

இன்று மாறுபட்ட சூழல் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. நிதானமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு பணியையும் கவனமாக மேற்கொண்டால் வெற்றியை பெறலாம். நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். பொறுமையாக இருந்து காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். மாறுபட்ட சூழல் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் உங்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும்.

இன்று பெண்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். இன்று மாணவர்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் வீண் ஆசைகள் மனதில் தோன்றலாம். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்