கடக ராசி அன்பர்களே,

இன்று நன்மைகள் கண்டிப்பாக நடைபெறக்கூடும். கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. செய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்படும். கூடுமானவரை உங்கள் பணியை முழுமையாக செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திப்பீர்கள். இன்று உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்று கருத்துக்களை தெரிவிப்பார்கள். எதிர்த்து பேசாமல் இருப்பது நல்லது.

மனம் தளராமல் இருக்க பாருங்கள். எதுவும் உங்களுக்கு வெற்றியாக அமையும். கணவன் மனைவி இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவுகளிடம் சஞ்சலங்கள் ஏற்படும். மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் தைரியமாக எதையும் செய்யுங்கள். வெற்றி கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது நல்லது.

பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி இருக்கும். இன்று மாணவர்களுக்கு தனித்து செயல்படும் ஆசை இருக்கும். சுயநலம் கருதாமல் காணப்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று அம்மன் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்