சிம்ம ராசி அன்பர்களே,

இன்று செயல்களில் திறமை வளரக்கூடும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிகள் சிறப்பாக நிறைவேறும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் இருப்பவரிடம் கருத்து மோதல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும்.

இன்று பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபடுவது போன்றவை இருக்கும். இன்று உத்தியோகத்தில் பணி சுமை கூடுதலாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த வேலையும் கண்டிப்பாக கிடைக்கும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். செய்யும் பணிகளை நிதானமாக செய்வது நல்லது. முன் கோபம் பட வேண்டாம்.

இன்று கணவனிடம் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : மேற்கு

அதிஷ்ட எண்  :  6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் பச்சை நிறம்