மேஷ ராசி அன்பர்களே,

இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க வேண்டியது வரும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். போக்குவரத்தில் விதிமுறைகளை பின்பற்றுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பான அலைச்சலை சந்திப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தேவையற்ற அலைச்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பண வரவு சீராக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது நல்லது.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இன்று பெண்கள் பணிபுரியும் இடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1, 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்