மீனம் ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடமும் அன்பாக பழகுவீர்கள். தீர்மானங்களை மிக சரியாக நிறைவேற்றுவீர்கள். மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். மாறுபட்ட கருத்துடையோர் மனமாரக்கூடும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இழப்புகள் எதுவும் பெரிதாக இருக்காது. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவியிடையே இருந்த சங்கடங்கள் தீர்ந்து விடக்கூடும். பிள்ளைகளின் கல்வி பற்றி கவலை ஏற்பட்ட பின்னர் சரியாகும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். நல்ல நண்பர் என்ற பெயரை எடுப்பீர்கள். முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும் .பெண்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்ளுங்கள். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள். லட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்ளுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்