கும்ப ராசி அன்பர்களே,

இன்று மன அழுத்தம் கண்டிப்பாக சரியாகும். இறைவன் அருளும் அற்புதமாக இருக்கிறது. மன நிறைவு ஏற்படும். மதிப்பு மரியாதையும் கூடிவிடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உதாசீனப்படுத்தியவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். மனோபயம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பயணத்தால் உங்களுக்கு பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். இன்று காரியத் தடை தாமதம் ஏற்படுத்தியது கண்டிப்பாக சரியாகும்.

எல்லா பிரச்சனைகளும் கண்டிப்பாக தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக தப்பித்து விடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். இரு சக்கர வாகனத்தை நீங்கள் கொஞ்சம் பொறுமையாக ஓட்டி செல்ல வேண்டும். இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள்.

நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொண்டிருப்பீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :கிழக்கு

அதிஷ்ட எண் : ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்