ரிஷப ராசி அன்பர்களே,

இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். எந்த ஒரு செயலிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப சுமை அதிகரிக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.

கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். இன்று பெண்களுக்கு சுயமரியாதை வெளிப்படும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய ஆடைகள் வாங்கும் சூழல் உள்ளது.

பெண்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சமைக்கும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் சின்ன சின்ன குழப்பங்களை சந்திப்பீர்கள். நிதி தொடர்பான விஷயங்களில் தெளிவாக இருங்கள். கல்வியில் அக்கறை தேவை. விளையாடும் போது கவனமாக இருங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: ஒன்று மற்றும் ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்