மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள் என்றே சொல்ல முடியும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். இன்று  குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். இன்று பொருளாதார உயர்வு ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும்.

சக ஊழியர்களின் உதவி கிடைக்கப்பெறும். மறைமுக எதிர்ப்புகள் விலகிச் செல்லும். அரசு வழியிலான காரியங்கள் சிறப்பாக முடியும். எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் எந்த செயலிலும் நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து ஈடுபடுவது நல்லது.

அக்கம் பக்கத்தினர் வீண்பழி சுமத்தக்கூடும் கவனமாக இருக்கவும். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கரை கொள்வீர்கள். கலை துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்