மிதுன ராசி அன்பர்களே,

இன்று பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. காரிய வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவீர்கள். இறைவன் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைக் கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படக்கூடும். சுப செலவுகள் ஒரு பக்கம் இருக்கக்கூடும்.

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கப்பெறும். உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்யுங்கள். திட்டம் தீட்டி சில பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள் அவசரம் வேண்டாம்.

இன்று பெண்களுக்கு  சுய கௌரவம் மேலோங்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். கையில் காசு பணம் இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். திறமையால் வெற்றி காண்பீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  4 ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் மஞ்சள் நிறம்