ரிஷப ராசி அன்பர்களே,

இன்று தைரியமாக எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கிறது. சிந்தித்து செயல்பட வேண்டும்.   குடும்ப சுமை கூடிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் கண்டிப்பாக மாறும்.

இன்று குழப்பங்கள் இருந்த  மனதில் தெளிவு பிறக்கும். வேண்டா வெறுப்பாக செயல்பட்டவர்கள் நட்பு பாராட்டுவார்கள். இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். கொடுக்கல்  வாங்கல்களில் எப்போதும் போல் செயலாற்றுங்கள். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாகவே அமையும் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள்,

இன்று எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம். இன்று மாணவர்கள் எதையும் தனித்து செய்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக படைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்   : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்