மேஷ ராசி அன்பர்களே,

இந்த நாள் வழிகாட்டுதலில் உங்களுக்கு நம்பிக்கை கூடும். ஆன்மீகத்தில் முழு ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுங்கள். உங்களுக்கு முன்கோபம் வேண்டாம். குடும்பத்தினருடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பின்னர் சரியாகும்.

சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.இன்று பொருளாதார உயர்வு சீராக இருக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கப்பெறும். மறைமுக எதிர்ப்புகள் விலகிச் செல்லும். இன்று பெண்களுக்கு ஆன்மீகத்தில் அக்கறை அதிகரிக்கும். எந்த செயலையும் சரி எது தவறு எது என்று ஆராய்ந்து செய்வது நல்லது. மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

இன்று மாணவர்கள் நன்றாக படிப்பது அவசியம். கல்விக்காக மட்டுமே நேரத்தை ஒதுக்குங்கள். விளையாடும் போது கவனமாக இருக்கவும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். உங்களுக்கு நல்லதே  நடக்கும்.

அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் வெள்ளை நிறம்