மிதுன ராசி அன்பர்களே,

இன்று எல்லோரிடமும் சிரித்து பேசி பழகுவீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்துவீர்கள். புதிய உறவுகள் மேம்படும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். பொருத்தார் பூமி ஆழ்வார்  என்பதற்குகேற்ப பொறுமையாக இருந்து வெற்றி காண்பீர்கள். தன்னிலை உணர்ந்து செயல்படும் ஆற்றல் உள்ளது.

இன்று காரிய வளர்ச்சிக்கு இறை வழிபாடு வேண்டும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வெற்றி காண்பீர்கள். புதிய நபர்களால் நன்மை ஏற்படும். உங்கள் செயலுக்கு சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கப்பெறும். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக உள்ளது. சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். லட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த  சாதத்தை காக்கைக்கு அன்னமாக படைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்