சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

​குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை இந்த ஆலோசனை கூட்டம் காட்டுகிறது.