புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பாலகுறிச்சி உள்ளிட்ட 6 கிராமங்களை, திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் சுமார் 2,012 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை. இந்நிலையில், அந்த 6 கிராமங்களில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, “தேர்தல் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், இப்போது எப்படி மீண்டும் வாக்களிக்க அனுமதிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி, மனுவைத் தள்ளுபடி செய்தது. தொகுதி மாற்றத்தால் எழுந்த இந்த விவகாரம், தற்போது நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் முடிவுக்கு வந்துள்ளது.
