மேற்குவங்க அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மெகா அதிரடி திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி அடம் பிடித்து வந்த நிலையில், அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை அதிரடியாகக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் 207 இடங்களை அள்ளி பாஜக வரலாற்று வெற்றி பெற்றும், “இது மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி” என முழங்கிய மம்தா, “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?” என மல்லுக்கட்டி வந்தார். ஆனால், 17-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த சூழலில், ஆளுநர் சட்டப்பேரவையை முறைப்படி கலைத்துள்ளதால், மம்தா பானர்ஜி தானாகவே தனது பதவியையும் அதிகாரத்தையும் இழந்துள்ளார்.
இதன் மூலம் மேற்குவங்கத்தில் மம்தாவின் நீண்டகால ஆட்சிக்கு அதிகாரப்பூர்வமாக ‘சுபம்’ போடப்பட்டு, பாஜகவின் புதிய அரசு அமைவதற்கான பாதையில் இருந்த முட்டுக்கட்டை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
