கேன்சர் என்பது உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய். இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் போட்டி போட்டது, பில்கேட்ஸ் போன்ற பணக்காரர்களும் பெரும் முதலீடு செய்தனர். ஆனால், எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ரஷ்யா கேன்சர் நோய்க்கு இரண்டு வகையான தடுப்பூசிகளை (mRNA மற்றும் Enteromix) கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை ஒரு ரஷ்ய தமிழர் இன்ஸ்டாகிராம் காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். இந்த தடுப்பூசிகள் கேன்சர் நோயாளிகளுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கின்றன, ஆனால் இவை தற்போது ரஷ்ய மக்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
எப்படி இந்த தடுப்பூசிகள் வேலை செய்கின்றன?
ரஷ்யாவின் முதல் தடுப்பூசி, mRNA வகை, ஒவ்வொரு நோயாளியின் மரபணு (ஜெனிடிக்ஸ்) தகவலைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து கேன்சர் செல்களை முழுவதுமாக அழிக்காமல், அவற்றின் வளர்ச்சியைக் குறைத்து, உடலில் பரவாமல் தடுக்கிறது. இதனால் நோயாளியின் ஆயுட்காலம் அதிகரிக்கும். மற்றொரு தடுப்பூசியான Enteromix, பாதிப்பு இல்லாத வைரஸ்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களை நேரடியாகத் தாக்கி முற்றிலுமாக அழிக்கிறது. ஆனால், இந்த தடுப்பூசிகள் கேன்சரைத் தடுக்க முடியாது, மாறாக ஏற்கனவே கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையாகப் பயன்படுகிறது.
View this post on Instagram
யாருக்கு கிடைக்கும்? விலை என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா இந்த தடுப்பூசிகளை விலங்குகள் மற்றும் சில மக்களுக்கு பரிசோதனை செய்து வந்தது. இப்போது இவை மருத்துவ பரிசோதனை (கிளினிக்கல் டிரையல்) கட்டத்திற்கு மாறியுள்ளன, அதாவது நோயாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. தற்போது இந்த தடுப்பூசிகள் ரஷ்ய மக்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு டோஸின் விலை இந்திய மதிப்பில் சுமார் 3.2 லட்சம் ரூபாய் ஆகும். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பெறுவது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.
