வரவிருக்கும் தீபாவளி, சத் போன்ற முக்கிய பண்டிகைகளைக் கொண்டாட இந்தியர்கள் பல லட்சக்கணக்கானோர் தங்கள் ஊர்களுக்குப் புறப்படுவதை முன்னிட்டு, ரயில்வே துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, தீபாவளி, சத் பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால் பெருமளவு பயணிகள் சேவையை அனுபவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பயணிகளுக்காக 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி, அக்டோபர் 13 முதல் 26-ம் தேதி வரை புறப்படும் பயணிகளும், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை திரும்பும் பயணிகளும், தங்களது ரயில் டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத தள்ளுபடியை பெற முடியும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே துறையின் IRCTC மற்றும் ரயில்வே அமைச்சக இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது, பண்டிகை சீசனில் அதிக கட்டணத்தை எதிர்பார்த்து இருந்த பயணிகளுக்கு மிகுந்த நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
