சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஒரு கலைஞர், அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குத் தனது கைவண்ணத்தால் அழகான இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். தர்மேஷ் ஹாடியா என்ற அந்த ஓவியக் கலைஞர், வந்தே பாரத் ரயிலின் உணவு வழங்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை அவர் அறியாமலேயே தத்ரூபமாக ஓவியமாக வரைந்தார்.

அந்த ஊழியர் தனது பணியில் மும்முரமாக இருந்தபோது, ரயிலின் ஒரு மூலையில் அமர்ந்து அவரது உருவத்தை காகிதத்தில் வடித்த கலைஞர், இறுதியில் அந்த ஓவியத்தை அவரிடமே வழங்கினார். தன்னை யாரோ ஒருவர் வரைந்துள்ளார் என்பதைச் சற்றும் எதிர்பாராத அந்த ஊழியர், தனது உருவப் படத்தை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரது முகத்தில் படர்ந்த அந்த அழகான புன்னகையும், மகிழ்ச்சியும் அருகில் இருந்த மற்ற பயணிகளையும் நெகிழச் செய்தது.

 

View this post on Instagram

 

A post shared by D H A R M E S H H A D I Y A | Artist (@_d_awesome_art_)

“>

இந்நிலையில் ரயிலில் கடினமாக உழைக்கும் ஊழியர்களைக் கௌரவிக்கும் விதமாக அமைந்த இந்தக் கலைஞரின் செயல் இணையவாசிகளின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. மனிதநேயத்தையும் கலையையும் இணைக்கும் இத்தகைய சிறிய செயல்கள் ஒருவரின் கடினமான வேலை நாளை எவ்வளவு இனிமையாக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.