சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், தெருவோரக் கடைகளில் உணவு உண்ணும் பொதுமக்களின் மனிதாபிமானத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்படும் ஒரு புதிய வகை மோசடி குறித்து இளம்பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் வந்த இரு சிறுமிகளில் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து நாடகமாடியுள்ளார்.
View this post on Instagram
உடனே மற்றொரு சிறுமி, அந்தப் பெண் கொடுத்த உணவைச் சாப்பிட்டதால் தான் இவ்வாறு நேர்ந்ததாகக் கூச்சலிட்டுப் பழியை அவர் மீது சுமத்த முயன்றுள்ளார். கூட்டமான இடத்தில் இத்தகைய அதிரடியான குற்றச்சாட்டுகள் மூலம் மக்களைப் பதற்றமடையச் செய்து, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதே இவர்களின் நோக்கம் என அந்த இளம்பெண் தனது பதிவில் விளக்கியுள்ளார்.
முன்பின் தெரியாதவர்களுக்கு உதவும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய மோசடி கும்பல்களிடம் சிக்கிவிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
