சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மெட்ரோ இரயில் நிலையத்தில் இரண்டு இளம்பெண்கள் செய்த செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இரயில் கதவு திறந்தவுடன், ஒரு பெண் உள்ளே இருந்தவாறு வாசலில் நின்றுகொண்டிருந்த தனது தோழியை திடீரென எட்டி உதைக்கிறார்.
இதில் நிலைதடுமாறிய அந்தப் பெண் பிளாட்பாரத்தில் கீழே விழுகிறார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாகத் தோன்றும் இந்தச் செயல், உண்மையில் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு நாடகம் என்பது பின்னர் தெரியவந்தது.
???😭😭 pic.twitter.com/Zmqixc8saM
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 16, 2026
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சில நொடிகள் ஓடும் வீடியோவிற்காகவும், லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகவும் பொது இடங்களில் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் பொறுப்பற்றத் தனமானது என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் கீழே விழுந்த பெண் சிரித்துக்கொண்டே மீண்டும் இரயிலுக்குள் வந்தாலும், மெட்ரோ போன்ற இடங்களில் இத்தகைய விளையாட்டுகள் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
