உத்தரப் பிரதேசத்தின் தியோரியா ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அறிந்த ஆர்.பி.எஃப். இன்ஸ்பெக்டர் முகமது, அங்கு சென்று விசாரணை செய்ய முயன்றார். அவர் திருநங்கைகளிடம் இது போன்ற செயல்கள் தவறு என்று அமைதியாக எடுத்துரைத்தார், மக்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

ஆனால், இன்ஸ்பெக்டர் முகமதுவின் பேச்சு திருநங்கைகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கோபமடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்து, முகமதுவை குச்சிகளால் தாக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முகமது, அங்கிருந்து தப்பிக்க முயன்று ஓடினார். ஆனால், திருநங்கைகள் விடாமல் அவரைத் துரத்தி சென்று தொடர்ந்து தாக்கினர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

“>

 

இறுதியில், அங்கிருந்த பயணிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து முகமதுவுக்கு உதவி செய்தனர். அவர்கள் திருநங்கைகளிடமிருந்து முகமதுவை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம், காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது .