நாடு முழுவதும் காலியாக உள்ள 9 ஆயிரத்து 144 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணினி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏப்ரல் நான்காம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.