இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயணத்தின் போது எந்த பிரச்சினையும் இல்லாமல் பயணம் செய்ய இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அம்மாவிற்கும் குழந்தைக்கும் தனித்தனி பெர்த் வழங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு வசதிக்கான கட்டணம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த திட்டம் சோதனை முறையில் கடந்த வருடம் மே மாதம் லக்னோ ரயிலில் தொடங்கியது. குறைபாடுகள் இருந்த நிலையில் தற்போது அது மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் முன்பதிவு செய்யும்போது பயணிகளுக்கு ரயில்வே இந்த வசதியை ஒதுக்கீடு செய்யும். முன்பதிவு செய்யப்பட்டு இருக்கையில் குழந்தைகளுக்கான பெர்த் அமைக்க பயணிகள் TTE அல்லது ரயில்வே ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம்.