இந்தியாவில் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக நிறுவனமான zomato நிறுவனம் தனது பயனர்களுக்கு யூபிஐ சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக மாறி உள்ளது. அதன்படி பயனர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ சேவைகள் மூலமாக நேரடியாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. zomato நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து சேவை வழங்கியுள்ளதாகவும் பயனர்கள் மற்றும் பியர் டு பியர் பேமென்ட்கள் இரண்டையும் செய்ய அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு zomato பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.